×

டிஎஸ்பி பிடித்து தள்ளிய வாலிபர் கார் மோதி பலி: கேரளாவில் பரிதாபம்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றின்கரை அருகே வாலிபரை டிஎஸ்பி பிடித்து தள்ளியதில் அவர் காரில் அடிபட்டு இறந்தார். கேரளாவின் நெய்யாற்றின்கரை டிஎஸ்பியாக இருப்பவர் ஹரிகுமார். இவர் கொடங்காவிளையில் உள்ள தனது நண்பர் பினு வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வது  வழக்கம். 2 நாட்களுக்கு முன் இரவு ஹரிகுமார் வழக்கம்போல பினு வீட்டுக்கு வந்திருந்தார். அப்ேபாது அவர் போலீஸ் சீருடையில் இல்லை. அவர் தனது காரை  வீட்டு முன்பு சாலையோரம் நிறுத்தி இருந்தார்.இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சனல்(33) என்பவர் அங்குள்ள ஓட்டலில் சாப்பிட வந்துள்ளார். அவர் ஹரிகுமாரின் கார் அருகே தனது காரை  நிறுத்திவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து டிஎஸ்பி ஹரிகுமார் வெளியே வந்தார். அப்போது தனது காருக்கு முன் வேறு கார் ஒன்று  நிறுத்தப்பட்டிருந்ததை கண்டு ஆத்திரம் அடைந்தார். ‘யார் எனது வாகனத்துக்கு இடையூறாக காரை நிறுத்தியது’ என சத்தம் போட்டார்.

இதைக்கேட்ட சனல் ஓட்டலில் இருந்து வெளியே ஓடி வந்தார். ‘என்னுடடைய கார் அருகே எப்படி நீ உனது காரை நிறுத்தலாம்’ என டிஎஸ்பி ஹரிகுமார் சத்தம்  போட்டுள்ளார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஹரிகுமார் மப்டியில் இருந்ததால் அவர் டிஎஸ்பி என்பது சனலுக்கு தெரியவில்லை.  இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த டிஎஸ்பி, சனலை பிடித்து இழுத்து சாலையில் வீசினார்.அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார், சனல் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு  போராடினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி  சனல் பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே ஆத்திரம் அடைந்த பொது மக்கள் டிஎஸ்பி ஹரிகுமாரை துரத்தினர். அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை பினு தனது காரில் ஏற்றி அழைத்து  சென்றுவிட்டார். தற்போது டிஎஸ்பி ஹரிகுமார் தலைமறைவாக உள்ளார்.இந்த நிலையில் சனலின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உறவினர்கள் அவரது உடலுடன்  திருவனந்தபுரம்-நாகர்கோவில் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து திருவனந்தபுரம் எஸ்பி அசோக்குமார் தலைமையில் போலீசார் சம்பவ  இடம் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் டிஎஸ்பி ஹரிகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து  உறவினர்கள் கலைந்து சென்றனர்.

டிஎஸ்பி ஹரிகுமார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பணியில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள  ஹரிகுமாரை நெய்யாற்றின்கரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அவர் மதுரைக்கு தப்பி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீசார் விசரணை நடத்தி வருகின்றனர்.மும்பை: மும்பை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருட்டுப்போன பணம் உரிய நபருக்கு தற்போது திரும்ப கிடைத்தது.
மும்பை சென்ட்ரல் பகுதியில் வசித்து வருபவர் சந்தேஷ் பரப் (37). இவர் மல்டிப்ளக்ஸ் தியேட்டர் ஒன்றில் வேலை செய்து வருகிறார். கடந்த 2007ல்  ₹5000  பணத்துடன் விலே பார்லேயில் இருந்து மும்பை சென்ட்ரல் வந்துள்ளார்.சென்ட்ரல் வந்திறங்கியதும் பணம் இருந்த பர்சை பார்த்தார். ஆனால் அதை காணவில்லை. இது பற்றி அந்தேரி ரயில்வே போலீசில் புகார் செய்தார். சில  நாட்களுக்கு அங்கு சென்று விசாரித்தும் வந்தார். ஆனால் அதன்பிறகு அங்கு செல்வதை நிறுத்தி விட்டார்.

ஆனால் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி சந்தேஷ் பரப்பிடம் பணத்தை திருடிய தைமூர் கான் என்பவனை கைது செய்து பணத்தையும் மீட்டனர். எனினும்  சந்தேஷ் பரப் மறுபடியும் அந்த பக்கமே வராததால் ரயில்வே போலீசார் அந்த பணத்தை தங்களிடம் பாதுகாப்பாக வைத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கையில் குற்றவாளி தைமூர் கான் ஜாமீன் பெற்று தலைமறைவாகி விட்டான். கோர்ட் சமீபத்தில்தான் இந்த  வழக்கை முடித்தது. பணத்தை சந்தேஷ் பரப்பிடம் திருப்பித்தரும்படி போலீசுக்கு கோர்ட் உத்தரவிட்டது. இதனால் ரயில்வே போலீசை சேர்ந்த 3 கான்ஸ்டபிள்கள்  கடந்த ஒரு வாரமாக சந்தேஷ் பரப்பை தீவிரமாக தேடினர். மொபைல் போன் நம்பர் மற்றும் முகவரி மாற்றத்தால் சந்தேஷ் பரப்பை அவ்வளவு எளிதாக  கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியாக ஒரு வார கால தேடுதலுக்குப் பிறகு அவரை கண்டுபிடித்து திருட்டுப் போன பணத்தை சந்தேஷ் பரப்பிடம்  ஒப்படைத்தனர். இதனால் அவர் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DSP ,Kerala , DSP caught , pedestrian, Kerala
× RELATED போலீஸ் விரட்டியபோது கீழே விழுந்து 3...